தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்லி சிறுநீர் கழித்ததால் டிவி சேதம்; புதுக்கோட்டை பஞ்சாயத்து வீடியோ! - Pudukottai news

தொலைக்காட்சி பழுதானதாக குறித்து தனியார் ஹோம் அப்ளையன்ஸ் கடைக்குச் சென்று வாடிக்கையாளர் புகார் அளித்த நிலையில் பல்லி சிறுநீர் கழித்ததால் தொலைக்காட்சி பழுதானதாக பதிலளித்த கடை ஊழியர்களால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 28, 2023, 5:11 PM IST

பல்லி சிறுநீர் கழித்ததால் தான் தொலைக்காட்சி பழுது!

புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அடுத்த நாயக்கர்பட்டி பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி தஞ்சாவூர் தனியார் ஹோம் அப்ளையன்ஸ் கடையில் சாம்சங் தொலைக்காட்சி ஒன்று வாங்கியுள்ளார்.

தற்போது அந்த தொலைக்காட்சி பழுதானதால், நிறுவனத்தின் சேவை மையத்தில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், சுவற்றில் இருக்கும் பல்லி சிறுநீர் கழித்ததால் தொலைக்காட்சி பழுதானதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட அதிர்ச்சியடைந்த உரிமையாளர் விஜயகுமார், கடைக்கே நேரில் சென்று அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இன்று தொலைக்காட்சியை சர்வீஸ் செய்து கொடுக்க வேண்டும் சுவற்றில் இருக்கும் பல்லி சிறுநீர் கழிப்பதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், விஜயகுமார் தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று தற்போது இது குறித்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details