புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மீமிசல் அருகே செய்யானம் பஞ்சாயத்துக்குட்பட்ட கீழஏம்பல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் சரியாக பணிக்கு வருவதில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் மாரிமுத்து எனும் ஆசிரியர் காலை பள்ளிக்கு வந்து கையொப்பம் இட்டுவிட்டு தனது சொந்த வேலைகளைப் பார்ப்பதற்குச் சென்றுவிடுகிறார்.