புதுக்கோட்டை மாவட்டம், நரயன் குடிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர், அன்பரசன். அதே பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர், ஞானசேகரன். கடந்த 2018ஆம் ஆண்டு ஆசிரியர் அன்பரசன் அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு உடந்தையாக தலைமை ஆசிரியர் ஞானசேகரன் இருந்துள்ளார். இது குறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அன்பரசன், தலைமை ஆசிரியர் ஞானசேகரன் ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை இன்று (ஜனவரி 18) விசாரணை செய்த நீதிபதி சத்யா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் அன்பரசனுக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 45 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர் ஞானசேகரனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க:பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!