புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக இழுத்து மூடக் கோரி, புறா மூலம் தூது விடும் நூதனப் போராட்டம் இன்று (செப்.14) நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் நியாஸ் தலைமையில், அக்கட்சியனர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
’டெல்லிக்கு புறா விடு தூது’ - தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் - Protest
புதுக்கோட்டை : சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூடக்கோரி டெல்லிக்கு புறா மூலம் தூது விடும் நூதனப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஈடுபட்டனர்.
Tamizhaga Vazhvurimai Katchi protest in Pudukkottai district
இதில், ”புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும், சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தியதற்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள களமாவூர் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு போராட்டத்தை அவர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.