புதுக்கோட்டையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாங்கனாம்பட்டி எனும் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
பொதுவாக கிராமங்களில் விவசாயம் செய்வது கூலிவேலை செய்து வருமானம் ஈட்டுவது போன்றவையைத் தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் விவசாயத்திற்கு சமமாக இந்த கிராமத்தில் குச்சியால் ஆன கூடை செய்யும் பணியை மட்டுமே பரம்பரை பரம்பரையாக தொழிலாகக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, "தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலை மட்டும் தான் செய்து வருகிறோம். மரக்குச்சி, தைல மரக் குச்சி போன்றவற்றைக் கொண்டு கூடை செடி வளர்ப்பு காடை கூண்டு போன்றவற்றை தயார் செய்கிறோம்.
இதனை நாங்கள் நேரடியாக விற்பதில்லை ஏனென்றால் மக்கள் யாரும் எங்களிடம் நேரடியாக வந்து வாங்குவதில்லை. மொத்தமாக கொடுத்து விடுவோம் அவர்கள் குறித்த தொகையைக் கொடுத்து விட்டு மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள்.
ஒரு நாளுக்கு 5 கூடை வரை பின்ன முடியும். இதற்கென இயந்திரங்கள் எல்லாம் கிடையாது.