ஏம்பல் அண்டகுடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (49). இவர் ஏம்பல் கடைவீதியில் சரக்கு வாகனங்களில் வரும் சரக்குகளை ஏற்றி இறக்கும் கூலிவேலை செய்துவருகிறார். குடிபோதையில்சக நண்பர்களுடன்ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகஒருவரை ஒருவர் மோசமாக பேசிக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.
இதில் விரக்தி அடைந்த நாகராஜன், அருகில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 55 அடி செல்போன் டவரின் மீதேறி தற்கொலைக்கு முயன்றார்.
தற்கொலைக்கு முயன்ற இளைஞர் இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஏம்பல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை கீழே இறங்கும்படி கூச்சலிட்டனர். பின்னர் வந்த தீயணைப்பு வீரர்கள் டவரின் மேலேறி நாகராஜனை மீட்டு அருகிலுள்ள ஏம்பல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்கத்தனர்.
இதையும் படிங்க:
அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: உயிர்தப்பிய பயணிகள்!