தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; வெளி மாநிலத்தவர் உள்பட 10 பேர் காயம்! - சிப்காட் அருகே எதிரெதிரே வந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதாக

புதுக்கோட்டை: சிப்காட் பகுதி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் வெளி மாநிலத்தினர் உள்பட 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Subsequent vehicle collisions
Subsequent vehicle collisions

By

Published : Dec 16, 2019, 5:11 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து திருச்சி நோக்கி காரில் ஹைதராபாத்தைச் செர்ந்த ஐந்து பேர் சென்றுள்ளனர். அப்போது எதிரே திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த சரக்கு வாகனம், சிப்காட் அருகே எதிரெதிரே வந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதாகக் கூறப்படுகிறது.

விபத்திற்கு காரணமாக இருந்த சரக்கு வாகனம்

மேலும் அவ்வழியாக வந்த மற்றொரு காரும் விபத்துக்குள்ளான கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஜேஷ், லெக்ஷ்மா, நரயனமா, ரமேஷ், யடாலெட்சுமி, ஆகிய 5 பேர் உள்பட புதுக்கோட்டை அய்யனாபுரத்தைச் சேர்ந்த முகமது ரபிக் (23), கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா (39), மற்றும் 3 பேர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

அடுத்தடுத்து மோதிய கார்கள்

இதனையடுத்து விபத்தில் சிக்கிய 10 பேரும் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details