தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழி சார்ந்த 100 கேள்விகள் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போதைய புதிய விதிமுறைகளின்படி டிஎன்பிஎஸ்சி முதல்நிலை தேர்வுகளில் தமிழ் மொழி சார்ந்த கேள்விகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூகப் பேரவை சார்பில் 300க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவ மாணவிகள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழி நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் மீண்டும் தமிழ் மொழி சார்ந்த கேள்விகளைக் கேட்க வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.