புதுக்கோட்டை மாவட்டம் சுந்தரம்பட்டி, கூத்தம்பட்டி, பிலியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் 2011ஆம் ஆண்டு துபாய் நாட்டிற்கு வேலைக்குச் சென்று உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வருட காலமாக அவர்கள் பணியாற்றி வரும் நிறுவனம் அவர்களுக்கு, ஊதியம் வழங்காததால் உணவிற்கே வழியின்றி அந்த ஆறு இளைஞர்களும் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே அவர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காணொலி வெளியிட்டிருந்தனர். கரோனா பாதிப்பால் மீண்டும் அவர்கள் தாங்கள் கஷ்டப்படுவதை பெற்றோர்களிடம் அலைபேசியில் தெரிவித்துள்ளனர்.