புதுக்கோட்டை: வெள்ளனூர் அருகே சாலையோர வயல்வெளியில் குவியலாக கிடந்த கற்சிற்பங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளனூர் அருகே உள்ள வாகவாசல் கிராமத்திலிருந்து பூங்குடி செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள வயல்வெளியில் குதிரை, சிங்கம் சிற்பங்களுடன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கற் தூண்கள், தண்ணீர் குடம், பெரிய வளையம் போன்ற 29 கலைப் பொருள்களை அப்பகுதியில் கிடப்பதாக தகவல் பரவியது. இவ்வளவு கற்கலைப் பொருள்கள் எப்படி இந்த இடத்தில் கொட்டப்பட்டது, யார் கொட்டியது? என அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் அதிக வேலைப்பாடுகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்ட கலைப் பொருள்களை ஏன்? இப்படி கொண்டு வந்து வயல்வெளியில் கொட்டினார்கள்? இந்தப் பொருள்களை வாங்கி வைத்திருந்தவர்கள் கொண்டு வந்து கொட்டினார்களா? அல்லது இது போன்ற கலைப் பொருள்களை திருட்டுத்தனமாக வாங்கி வைத்திருந்து சிலை கடத்தலில் சிக்கிக் கொள்வோம் என்று கொண்டு வந்துகொட்டினார்களா? என்ற கேள்வியும் அப்பகுதி கிராம மக்களிடம் எழுந்துள்ளது.