தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றங்களைக் குறைக்க புதுக்கோட்டையில்  33 சிசிடிவி கேமராக்கள்! - புதுக்கோட்டையில்  33 சிசிடிவி கேமராக்கள்

புதுக்கோட்டை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டுகள், குற்றங்களை குறைக்கவும் கண்டறியவும் புதுக்கோட்டை மாவட்ட நகருக்குள் 33 சிசிடிவி கேமராக்களை பொருத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.

sp selvaraj introduced cctv camara

By

Published : Oct 23, 2019, 5:18 PM IST

புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்சம்பவங்கள் ஏதேனும் நடக்காமலிருக்க புதுக்கோட்டை நகர் பகுதியில் காவல்துறை சார்பில் 33 இடங்களில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்கும் பணியினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுக்கோட்டை நகர பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், புதுக்கோட்டை நகரில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் சிசிடிவி கேமரா தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

33 சிசிடிவி கேமராக்களை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் துவக்கி வைத்தார்

இதன்மூலம் யாரேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்களை உடனுக்குடன் கைது செய்து தண்டனை வழங்க ஏதுவாக இருக்கும். அதேபோல் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். புதுக்கோட்டை மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அவர் கூறினார்.

இதையும் படிங்க:

சினிமா போஸ்டர்களால் அழிந்துவரும் சுவர் ஓவியங்கள்: பொதுமக்கள் வேதனை

ABOUT THE AUTHOR

...view details