தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழிவுநீர் தொட்டியில் விழுந்து தூய்மைப் பணியாளரின் மகன்கள் உயிரிழப்பு - கழிவுநீர் தொட்டியில் விழுந்து

புதுக்கோட்டை: விளையாடிக்கொண்டிருந்த தூய்மைப் பணியாளரின் இரு மகன்கள் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

sons of sanitary worker after falling in Sewage tank in pudhukottai
sons of sanitary worker after falling in Sewage tank in pudhukottai

By

Published : Aug 2, 2020, 10:02 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கரம்பக்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிபவர் குமார். இவர் கறம்பக்குடியில் உள்ள விட்டல்தாஸ் நகரில் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

இவரது மகன்கள் கிருத்திக் ரோஷன் (5), அரவிந்த் (4) ஆகியோர் வீட்டுக்குப் பின்னால் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கழிவுநீர் தொட்டியில் இருவரும் தவறி விழுந்தனர்.

விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை காணாமல் பெற்றோர் தேடியபோது, அங்கிருந்த கழிவுநீர் தொட்டியில் இருவரும் கிடந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மகன்கள் இருவரையும் உடனடியாக மீட்டு, கரம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டுச் சென்றனர்.

சிறுவர்கள் விழுந்த கழிவுநீர் தொட்டி

ஆனால், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் முன்பே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து கரம்பக்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...சொத்து தகராறில் விவசாயி அடித்துக் கொலை!

ABOUT THE AUTHOR

...view details