புதுக்கோட்டை அருகே உள்ள இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த மாதம் 26ஆம் தேதி நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் எந்த மாதிரியான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது என தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட சமூக நீதி கண்காணிப்புக் குழு உறுப்பினர்களான ராஜேந்திரன், சுவாமிநாதன், தேவதாஸ், சாந்தி ரவீந்திரநாத் என நான்கு பேர் கொண்ட கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், தற்போது இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் அந்தப் பகுதி பொதுமக்களுடன் விசாரணை செய்து வருகின்றனர்.
இறையூர் விவகாரத்தில் நடந்தது என்ன? - சமூக நீதி கண்காணிப்புக் குழு ஆய்வு - புதுக்கோட்டை செய்திகள்
இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் மக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட சமூக நீதி கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைவேலு மற்றும் ஆதி திராவிட நல அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த விசாரணையில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் யார் யாரெல்லாம் காரணம், ஏன் இன்னும் சம்பந்தபட்ட நபரை கைது செய்யவில்லை, இந்த பிரச்னைக்குப் பிறகு எந்த விதத்தில் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்; இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு தற்போது குடிநீர் விநியோகம் எப்படி செய்யப்பட்டு வருகிறார்கள் என்று பல்வேறு கட்ட ஆய்வினை இந்தப் பகுதியில் உள்ள பட்டியலின மக்களிடம் நடத்தினர்.
இதையும் படிங்க:Pongal special trains: பொங்கல் கூடுதல் சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு