புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள அம்புக்கோவிலைச் சேர்ந்தவர் ஜெயபாரத் (40). இவருடைய மனைவி மாரியம்மாள் (24). கர்ப்பிணி பெண்ணான மாரியம்மாள் சம்பவத்தன்று வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த மாரியம்மாளின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சலை (65) என்ற மூதாட்டி, உறவினர்கள் வந்திருப்பதாக கூறி அவரைத் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின், மாரியம்மாளை வீட்டிற்குள் அனுப்பிவிட்டு கதவை மூடியுள்ளார்.
பிறகு அந்த வீட்டில் மறைந்திருந்த இடையன் கொல்லைப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (51), அண்ணாத்துரை (41) ஆகிய இருவரும் மாரியம்மாளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து, மாரியம்மாள் தனது கணவர் ஜெயபாரத்திடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர், ராஜேந்திரன், அண்ணாதுரை ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் தப்பியோடிய மூதாட்டி அஞ்சலையையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது