புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகள், நான்காம் வகுப்பு தமிழ் பாடத்தில் இடம்பெற்றுள்ள முளைப்பாரி பாடலுக்கான செயல்திட்டமாக மாணவர்கள் முளைப்பாரி வளர்த்து எடுத்து வந்தனர்.
நம்மாழ்வாருக்கு மரியாதை செலுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்! - புதுக்கோட்டை
புதுக்கோட்டை: சேந்தன்குடி அருகே உள்ள அரசுப் பள்ளியில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை போற்றும் விதமாக அவரது படத்தின் முன்பு முளைப்பாரி வைத்து கும்மி அடித்தனர்.
nammalvar
மற்ற வகுப்பு மாணவர்கள் அவர்களை வரவேற்க, வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் புகைப்படத்தை நடுவில் வைத்து அதைச் சுற்றி முளைப்பாரி வைத்து பாடலுடன் கும்மி அடித்தனர். இந்த நிகழ்ச்சி அப்பகுதியினர் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுக்கு நம்மாழ்வார் குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் புரிய வைப்பதற்காக இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.