புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த வார்பட்டு கொள்ளுப்பட்டியில் வசித்து வருபவர் பச்சை (43). இவரும் இவரது மனைவியும் கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு பச்சையம்மாள் என்ற ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் இருவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டனர். பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய பச்சையம்மாள், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, இரும்பு பீரோ உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் ரொக்கப்பணம் 20,000/- ஒரு செல்போன் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.