கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வீட்டை விட்டு வெளியேறும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பேனா வழங்கும் கோட்டாட்சியர் - புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்
புதுக்கோட்டை: கீழராஜ வீதிவில் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பேனா, முகக்கவசங்கள் வழங்கி கோட்டாட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
![முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பேனா வழங்கும் கோட்டாட்சியர் revenue officer providing pen](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:56-tn-pdk-02-revnu-officer-awarness-visual-img-scr-7204435-08062020160619-0806f-1591612579-134.jpg)
revenue officer providing pen
இந்த நிலையில் முகக்கவசம் அணிந்துவர விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் வட்டாட்சியர் முருகப்பன், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், நகர காவல் நிலைய ஆய்வாளர் பரவாசுதேவன் உள்ளிட்டோர் கீழராஜ வீதி கடைவீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் அவர்கள் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களை நிறுத்தி முகக்கவசம் வழங்கி அதனை நியாபகப்படுத்துவதற்காக பேனாவும் வழங்கிவருகின்றனர்.