தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஓய்வுபெற்ற விஏஓ-வுக்கு 14 ஆண்டுகள் சிறை! - Retired village administration officer jailed for 14 years for child abuse

புதுக்கோட்டை: மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

By

Published : Dec 16, 2020, 7:57 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கங்காணி பட்டியைச் சேர்ந்தவர் காடப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆவார். இவர் 12.03.2019இல் அப்பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில், திருமயம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காடப்பனை கைதுசெய்தனர். இவ்வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 15) வழக்கை விசாரித்த நீதிபதி முனைவர் சத்யா, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காடப்பனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள ஒரு லட்ச ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details