தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரங்குகளுக்குத் தினமும் உணவளிக்கும் உணவக உரிமையாளர்! - Corona virus

புதுக்கோட்டை: கரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கிக் கிடக்கும் நிலையில், காட்டுப்பகுதியில் உணவின்றித் தவித்து வரும் குரங்குகளுக்கு நாள்தோறும் உணவு அளித்து வருகிறார், உணவக உரிமையாளர் ஒருவர்.

குரங்குகளுக்கு உணவக உரிமையாளர் மாகாதேவன் உணவளிக்கும் காட்சி
குரங்குகளுக்கு உணவக உரிமையாளர் மாகாதேவன் உணவளிக்கும் காட்சி

By

Published : Apr 22, 2020, 5:17 PM IST

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதன் தாக்கத்தினால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் வருகின்றனர்.

தமிழ்நாட்டிலும் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும், பலியாவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, உயிர் பயத்தினால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் இருக்கிறது.

குரங்குகளுக்கு உணவக உரிமையாளர் மகாதேவன் உணவளிக்கும் காட்சி

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் காட்டுப் பகுதியில் உணவின்றித் தவித்து வரும் 50க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு நாள்தோறும் உணவளித்து வருகிறார், உணவக உரிமையாளர் மகாதேவன்.

ஆலங்குடியில் வெங்கடேஸ்வரா ஹோட்டல் என்ற உணவகத்தை நடத்தி வரும் இவர், காலை மற்றும் நண்பகல் வேளையில், தனது உணவகத்தில் பார்சல் மட்டும் கொடுக்கும் வியாபாரத்தை முடித்துவிட்டு காலையிலும், நண்பகலிலும் காட்டுப் பகுதியில் உள்ள குரங்குகளுக்கு இட்லி, தயிர் சாதம், புளி சாதம் என நாள்தோறும் இருசக்கர வாகனத்தில், தனது உதவியாளருடன் கொண்டு சென்று உணவளித்து வருகிறார்.

வாகனப் போக்குவரத்து ஏதுமில்லாமல் உணவின்றித் தவித்து வரும் குரங்குகளுக்கு உணவக உரிமையாளரின் உயர்ந்த மனப்பான்மையால், தற்போது உணவு கிடைத்து வருகிறது. இவரது இச்செயலை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனா: சீனாவில் இரண்டு மருத்துவர்களுக்கு தோல் நிறம் கருப்பாக மாறியது

ABOUT THE AUTHOR

...view details