தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் கைது - ஆயுதப்படை காவலர் கைது

தூத்துக்குடியில் சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற ஆயுதப்படை காவலரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Chain snatching, Pudukottai chain snatching cases
செயின் பறிப்பு

By

Published : Dec 2, 2021, 7:16 AM IST

தூத்துக்குடி: புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (40), தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர், பணி முடிந்து மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், கவிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார்.

அப்போது சுதாரித்துக்கொண்ட கவிதா சத்தம்போட்டார். இதனால், பயந்துபோன கொள்ளையன் அங்கிருந்து தெறித்து ஒடினார். இது குறித்து கவிதா, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், செயின் பறிப்பில் ஈடுபட்டவர் பொட்டலூரணியைச் சேர்ந்த முத்துகுமார் (27) என்பதும், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. உடனே முத்துகுமாரை கைது செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:எலக்ட்ரிசியன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

ABOUT THE AUTHOR

...view details