தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை: சாலையோர கடைகள் அகற்றம் - வருவாய்த்துறை

தஞ்சை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர கடைகளை அலுவலர்கள் அகற்றினர்.

தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர கடைகள் அகற்றம்
தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர கடைகள் அகற்றம்

By

Published : Nov 2, 2022, 10:49 PM IST

புதுக்கோட்டை: தஞ்சை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் கூலித் தொழிலாளிகள் காலணிகள், பேக் தைக்கும் சாலையோர கடைகள் நடத்தி வருகின்றனர்.

சாலையோர கடைகள் அகற்றம்

பல தலைமுறையாக இங்கு சாலையோரம் கடைகள் வைத்து காலணிகள், பேக் போன்றவைகளை தைத்துக் கொடுப்பதாகவும் இதனால் பள்ளி குழந்தைகள் மக்கள் பயனடைந்ததாகவும் கூறுகின்றனர். இன்று திடீரென கந்தர்வகோட்டை பகுதியில் அமைக்கப்பட்ட கடையை அப்புறப்படுத்தும் பணியில் வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் ஈடுபட்டிருந்தனர்.

தாங்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். எனவே தமிழ்நாடு அரசு கூலித் தொழிலாளிகளின் நலனை கருத்தில் எடுத்துக் கொண்டு இந்த இடத்திற்கு பதிலாக வேறு இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ராஜேஸ்வரி, துணை வட்டாட்சியர் பழனிசாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசி ஆகியோர் கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து கூலித் தொழிலாளிகள் வருவாய் துறை அதிகாரிகளிடம் தாங்கள் பல தலைமுறையாக அப்பகுதியில் கடை அமைத்திருந்தோம் ஏன் தங்களை அப்புறப்படுத்துகிறீர்கள் என்று கேட்டபோது இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், சாலையோரம் கடைகள் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், தொடர்ந்து விபத்து நடைபெறுவதாகவும் விபத்தை நடைபெறாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக காவல் துறையும் வருவாய் துறையும் இணைந்து சாலையோர கடைகளை அப்புறப்படுத்தியதாக கூறியுள்ளனர்.

சாலையோர காலணிகள் தைக்கும் தொழிலாளிகள் இந்த இடத்தில் இதுவரை எந்தவொரு விபத்துகளும் நடைபெறவில்லை என்று மறுத்து அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதையும் படிங்க: குவைத் விபத்தில் உயிரிழந்த இளைஞர் - உடலை மீட்டு தருமாறு உறவினர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details