தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக உறவினர்கள் செயல்பட தடை! - Women local representatives

புதுக்கோட்டை: பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ உள்ளாட்சி நடவடிக்கைகளில் செயல்பட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என‌ மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Relatives barred from acting instead of female local representatives
Relatives barred from acting instead of female local representatives

By

Published : Jul 14, 2020, 7:48 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ உள்ளாட்சி நடவடிக்கைகளில் ஈடுபட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது, "நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சிமன்ற அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முழுமையாக பயன்படுத்தி சுதந்திரமாகவும், சிறப்பாகவும் செயல்பட அரசாணை (நிலை) எண்: 60, நாள்: 23.05.2016, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இன்படியும், அரசு அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில் ஆய்வுக் கூட்டங்களிலோ, ஊராட்சிமன்றக் கூட்டங்கள், கிராமசபைக் கூட்டங்களில் தொடர்புடைய பெண் ஊராட்சிமன்றத் தலைவருக்கு பதிலாக அவரது கணவரோ, நெருங்கிய உறவினர்களோ செயல்படுவதை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும், ஏதேனும் புகார்கள் இருப்பின், அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டணமில்லா 1800-425-9013 என்ற தொலைபேசி எண்ணிலோ, 04322-222171 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம்" என்றார்.

இதையும் படிங்க:கல்குவாரிக்கு குளிக்கச் சென்ற பள்ளி சிறுமிகள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details