புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அழியா நிலை கிராமத்தில் ரயில்வேக்கு சொந்தமான 80 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை அடையாளம் காண்பதற்காக ரயில்வே துறை சார்பாக 150 எல்லைக் கம்பிகள் நடப்பட்டிருந்தன. இந்தப் பகுதியில் மரங்கள், கிராவல் மண் அடிக்கடி கொள்ளை போகிறது. இவற்றுடன் சேர்ந்து ரயில்வே எல்லைக் கம்பிகளும் காணாமல் போயுள்ளன.
ரயில்வேக்கு சொந்தமான ரூ.40 லட்சம் கம்பிகள் மாயம் - sand theft
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே அழியா நிலை கிராமத்தில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்புள்ள எல்லைக் கம்பிகள் திருடு போய்விட்டதென அறந்தாங்கி வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
கம்பி
இதனை எந்த அரசு அலுவலர்களும் கண்டுகொள்ளவில்லை. இந்தக் கம்பிகள் மதிப்பு ஏறத்தாழ ரூ.40 லட்சம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து, அறந்தாங்கி வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.