புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பூங்கினிப்பட்டி காட்டுப்பகுதியில் மயில் கத்தும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சிறிது நேரம் கழித்து அங்கு சென்று பார்த்தபோது மலைப்பாம்பு ஒன்று மயிலை விழுங்கி விட்டு நகர முடியாமல் இருந்ததைக் கண்டுள்ளனர். பின்னர் இது குறித்து உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மயிலை விழுங்கிய மலைப்பாம்பு
புதுக்கோட்டை: இலுப்பூர் அருகே மயிலை விழுங்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.
snake
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்தனர். மலைப்பாம்பு முழுங்கிய மயிலை சிறிது நேர போராட்டத்திற்கு
பின் இறந்த நிலையில் மீட்டனர்.
இதனையடுத்து இறந்த மயிலானது வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமனிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதியில் பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டுச் சென்றனர்.