தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது சவாலாக உள்ளது - விஜயபாஸ்கர்! - pudukottai

புதுக்கோட்டை: சித்தா படிப்பிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது சவாலாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விஜயபாஸ்கர்

By

Published : Jun 22, 2019, 5:57 PM IST

புதுக்கோட்டை மாவட்ட மின்வாரியத்தில் 24 மணி நேரமும் பொதுமக்கள் மின் தடை மற்றும் மின் புகார்கள் குறித்து புகார் செய்வதற்கான தானியங்கி சேவை மையத்தையும், அம்மா காப்பீட்டு திட்டத்திற்கான புதிய வார்டையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், ”இந்த ஆண்டு சித்தா படிப்பிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. விலக்கு பெறுவது மிகவும் சவாலாக உள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

கேரளா எல்லையில் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டதால் நிபா வைரஸ் யாருக்கும் வரவில்லை. மேலும் பீகார் மாநிலத்தில் அதிகளவு பரவி வரும் மூளை காய்ச்சல் தமிழ்நாட்டிற்கு பரவ வாய்ப்பில்லை.

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் தனியார் மருத்துவமனைக்கு நிகராக இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details