தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம் - புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - 5, 8ஆம் வகுப்பு பொது தேர்வு செய்திகள்

புதுக்கோட்டை: மூன்று ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்ட ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கான  பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள்  போராட்டம் நடத்திவருகின்றனர்.

5th 8th public exam

By

Published : Sep 18, 2019, 2:54 PM IST

ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை முன்னதாக அறிவித்திருந்தது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில் நேற்று, அமைச்சர் செங்கோட்டையன் இத்தேர்வு முறையில் தமிழ்நாட்டிற்கு மூன்று ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இது குறித்து அவர்கள் கூறுகையில், "மூன்று ஆண்டு விலக்கு அளித்திருப்பது நிரந்தரமானது அல்ல. இதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். எப்போது வேண்டுமானாலும் புதிய கல்விக் கொள்கையில் இதனை கொண்டுவருவார்கள்" எனத் தெரிவித்தனர். எனவே இந்தப் பொதுத்தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்து போராடிவருகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details