தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 9, 2020, 7:12 PM IST

ETV Bharat / state

திருவப்பூர் கோயில் தேர் திருவிழா - லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு.!

புதுக்கோட்டை: பிரசித்திபெற்ற திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.

திருவப்பூர் கோயில் திருவிழா புதுக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா Tiruvapur Temple Festival Puthukkottai Sri Muthumariamman Temple Chair Festival Sri Muthumariamman Temple Chair Festival
Puthukkottai Sri Muthumariamman Temple Chair Festival

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் புகழ் பெற்ற கோயிலாக கருதப்படுகிறது. மிகவும் பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மாசிமகத் திருவிழா இன்று நடைபெற்றது.

இந்தத் திருவிழாவில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அழகு வேல் குத்துதல், பால்குடம் எடுத்தல், தீச்சட்டி தூக்குதல், பறவைக் காவடி எடுத்தல், தீ மிதித்தல் உள்ளிட்ட வேண்டுதலுக்கான நேர்த்திக்கடனை செலுத்தினர்.

திருவப்பூர் கோயில் தேர் திருவிழா.

இந்தத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். இதில் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டன.

இதையும் படிங்க:நாகர்கோவிலில் தலையில் கல்லை போட்டு இளைஞர் கொலை!

ABOUT THE AUTHOR

...view details