புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பல்வேறு சமூக அமைப்பினர் தங்களது கருத்துக்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறன்றனர்.
அந்தவகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை எனவும், அதற்கான விளக்கத்தை மத்திய அமைச்சருக்கு கடிதமாக எழுதி அதற்கு பொதுமக்கள் அனைவரிடமும் கையெழுத்து வாங்கி கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தனர். இந்த கையெழுத்து வாங்கும் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று தொடங்கியது.
பொதுமக்களும் ஈடுபாடுடன் கையெழுத்து போட்டு வருகின்றனர். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் அதற்காக இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த புதிய கல்வி கொள்கையானது, கல்வியின் நிலைமையையே மாற்றிவிடும்.
புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெறக்கோரி மத்திய அமைச்சருக்கு கடிதம்! மேலும் இக்கல்விக் கொள்கை மாநில அரசின் கல்விக் கொள்கையை அழித்துவிடும். எனவே இந்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.