தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் விழுந்த கண்ணாடி.. நொடிப்பொழுதில் இளைஞர் பலி! - சாலை விபத்து

சாலையில் விழுந்த மூக்குக் கண்ணாடியை எடுக்க இரு சக்கர வாகனத்தை அஜாக்கிரதையாக திருப்பிய போது பின்னால் வந்த லாரி மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை விபத்து
சாலை விபத்து

By

Published : Nov 27, 2022, 2:33 PM IST

புதுக்கோட்டை: காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். தனது நண்பர் சந்துரு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருமயம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அரசம்பட்டி என்ற இடத்தில் சென்ற போது குமாரின் மூக்கு கண்ணாடி சாலையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

மூக்குக் கண்ணாடியை எடுப்பதற்காக இரு சக்கர வாகனத்தை குமார் சட்டென திருப்பியதாக கூறப்படுகிறது. இதில் பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். எந்தவித முன்னறிவிப்புமின்றி லாரி சட்டென நின்றதால், பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனமும் லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

குமார் மற்றும் லாரியின் பின்புறத்தில் மோதிய இரு சக்கர வாகனஓட்டி உள்பட இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார் விபத்தில் உயிரிழந்த சந்துருவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் காயம் அடைந்த குமார் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் விழுந்த மூக்குக் கண்ணாடியை எடுக்க பின்னால் வந்த லாரியை கவனிக்காமல் இளைஞர் செய்த அஜாக்கிரதை செயலால் ஒரு உயிர் போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:எல்கர் பரிஷத் கலவர வழக்கு: பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே ஜாமீனில் விடுதலை...!

ABOUT THE AUTHOR

...view details