புதுக்கோட்டை அருகே நெடுஞ்சேரி கிராமத்தில் உள்ள பாசன கண்மாயில் இன்று திருநங்கைகள் அறக்கட்டளை சார்பில் முப்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்றுகூடி மாவட்ட தலைவர் அசினா தலைமையில் பனம் விதைகள், மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
கடந்த வருடம் கஜா புயலால் பாதிப்படைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்து வந்தது. மீண்டும் அம்மாவட்டத்தில் அரசு சார்பாகவும் பல்வேறு அமைப்புகள் சார்பாகவும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.