தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கத்தியை காண்பித்து மிரட்டல்; பிரபல ரவுடி குண்டரில் கைது! - சிறையில் அடைப்பு

புதுக்கோட்டை: கத்தியை காண்பித்து மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடி பிரான்சிஸ் பிருத்திவிராஜை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

knife

By

Published : Aug 24, 2019, 5:42 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த ஜோஸப் மெர்சிலின் மகன் பிரான்சிஸ் பிருத்திவிராஜ் (வயது 24). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலுப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பாக்யராஜ் (வயது 36) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பாக்யராஜ் மீது வழக்குப்பதிவு செய்த இலுப்பூர் போலீசார், ரவுடி பிரான்சிஸ் பிருத்திவிராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் மீது ஏற்கனவே, பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதையடுத்து, பிரான்சிஸ் பிருத்திவிராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். பின்னர், அதற்கான ஆணையை புதுக்கோட்டை துணை சிறையில் இருக்கும் பிரான்சிஸ் பிருத்திவிராஜிடம் வழங்கியதைத் தொடர்ந்து, அவரை திருச்சி மத்திய சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details