'இளம்பிள்ளைவாதம்' எனப்படும் போலியோ நோயினை ஒழிப்பதற்கான சொட்டு மருந்து முகாம், இன்று(ஜன.31), நாடு முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது.
அதன்படி, புதுக்கோட்டையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் 70 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா காலகட்டமாக இருந்தாலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும்.
புதுக்கோட்டை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கடந்த 17 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. அதை தக்க வைப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். எவ்விதமான தயக்கமும், பயமுமின்றி , பொது மக்கள் கட்டாயமாக போலியோ மருந்து போட்டுக் கொள்ள வேண்டும். முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.