புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் கடைவீதி பகுதியில் காவல்துறையினர் வாகனசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் நெகிழி பைகளும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் அதனை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அறந்தாங்கியிலிருந்து ஆவுடையார்கோயில் நேக்கி வந்த வாகனங்களை சோதனை செய்தபோது அறந்தாங்கி அழியாநிலை பகுதியைச் சேர்ந்த அரசகுமார் என்பவர் வகானத்தில் அரசால் தடைசெய்யபட்ட சுமார் 1.25 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ நெகிழி கேரிபைகளுடன் சுமார் 75 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் 70 கிலோ இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்களுடன் அவரிடம் இருந்து வேனையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து ஆவுடையார்கோயில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இரண்டு லட்சம் மதிப்புள்ள புகையிலை, நெகிழி பொருட்கள் பறிமுதல்! இதையும் படிங்க:போதை சாக்லெட் விற்பனை: 3 வடமாநிலத்தவர்கள் கைது!