தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சினிமா பாணியில் பைக் திருட்டு.. புதுக்கோட்டையில் நடந்தது என்ன? - மோட்டார் சைக்கிள் திருட்டு

சினிமா பாணியில் பைக் திருடிய இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharatசினிமா பாணியில் பைக்கை ஓட்டிபார்ப்பதாக  கூறி நூதன திருட்டு - நூதன திருட்டு
Etv Bharatசினிமா பாணியில் பைக்கை ஓட்டிபார்ப்பதாக கூறி நூதன திருட்டு - நூதன திருட்டு

By

Published : Dec 15, 2022, 1:40 PM IST

Updated : Dec 15, 2022, 2:32 PM IST

புதுக்கோட்டை: இலுப்பூர் கோட்டைத்தெருவை சேர்ந்தவர் பாண்டிமுருகன் இவரது மகன் பரணி (21) இவரது மோட்டார் சைக்கிளை விற்பனை செய்வதாக இவர் சமூக வளைதலங்களில் பதிவிட்டுள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்த காரைக்குடி போலீஸ் காலணியை பகுதியை சேர்ந்த நந்தா மகன் ரஞ்சித் (19) மற்றும் காரைக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வினோத்குமார் (18) ஆகிய இருவரும் பைக் வாங்க சென்றுள்ளனர்.

மேலும் காரைக்குடியில் இருந்து இலுப்பூர் பேருந்து நிலையம் அருகே இருந்து பரணிக்கு போன் செய்து தாங்கள் மோட்டார் சைக்கிள் விற்பதாக விளம்பரம் பார்த்தோம் அதை வாங்குவதற்கு வந்துள்ளோம் எடுத்து வாருங்கள் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் விற்பனை செய்வதற்காக பரணி தனது மோட்டார் சைக்கிளை இலுப்பூர் பேருந்து நிலையம் அருகே எடுத்து வந்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளை பார்த்த ரஞ்சித், வினோத்குமார் இருவரும் மோட்டார் சைக்கிளை ஓட்டிபார்க்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனை நம்பிய பரணி மோட்டார் சைக்கிளை அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் சினிமா பாணியில் மோட்டார் சைக்கிளுடன் அங்கிருந்து தப்பி சென்றனர்.

வெகுநேரம் ஆகியும் மோட்டார் சைக்கிள் திரும்பி வராததால் சந்தேகமடைந்த பரணி சிலர் உதவியுடன் பல்வேறு இடங்களில் அவர்களை தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. இதுகுறித்து பரணி இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் 24 மணி நேரத்திற்குள் மோட்டார் சைக்கிளை கடத்தி சென்ற ரஞ்சித் மற்றும் வினோத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்திய 6 மீனவர்கள் கைது!

Last Updated : Dec 15, 2022, 2:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details