தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் நாடு செலுத்தல் விழா கொண்டாட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு! - muthumariamman temple

திருமயம் உலக புகழ்பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் நாடு செலுத்தல் பெருந்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

உலக புகழ் பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
உலக புகழ் பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

By

Published : Apr 10, 2023, 8:42 PM IST

உலக புகழ் பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

புதுக்கோட்டை:பொன்னமராவதி அருகே கொன்னையூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் உலக புகழ் பெற்ற கோயிலாக திகழ்ந்து வருகிறது. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் உட்சபட்ச நிகழ்வான நாடு செலுத்துதல் எனும் திருவிழா, உலகப் புகழ் பெற்றதாக திகழ்ந்து வருகிறது. இவ்விழாவின் தொடக்கமான பூச்சொரிதல் விழா கடந்த மாதம் 19ஆம் தேதி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அதற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை அக்னி காவடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 14 ஊர்களைச் சேர்ந்த ஊர் மக்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து, தீ மிதித்து வழிபட்டனர். தீ மிதி திருவிழாவை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காப்பு கட்டுதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து 14 நாட்கள் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழா மண்டகப்படி நாட்களில் தினசரி இரவில் அம்பாள் திருவீதி உலா வரும்பொழுது ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அம்மன் முன்பாக வரிசையாக நின்று தீப்பிடித்தனர்.மண்டகப்படி நாட்களில் கோயிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆண்கள் பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். மண்டகப்படி நாட்களில் கோவில் வளாகத்தில் ஒவ்வொரு ஊர்களின் சார்பாக கலை நிகழ்ச்சிகள் நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விழாவின் இறுதியாக நாடு செலுத்துதல் மற்றும் பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செம்பூதி நாடு ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஈட்டி கம்பு உள்ளிட்ட பொருட்களுடன் கலந்து கொண்டனர். மேலும், பக்தர்கள் உடலில் சேறு சகதிகளை பூசி கொண்டும் பொங்கல் வைத்தும் மாவிளக்கு வைத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இந்த விழாவினை காண சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டிமின்றி தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வழிபட்டு சிறப்பித்தனர். பாண்டிச்சேரியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்து விழாவினை கண்டு ரசித்தனர். தீயணைப்பு துறையினர் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பொன்னமராவதி காவல் துறையினர் சார்பில் நிகழ்ச்சிகளில் குளறுபடிகள் நடக்காமால் இருக்கும்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக கிளை சார்பில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதையும் படிங்க:சினிமா பிரபலங்களை மிஞ்சிய பொம்மன் - பெள்ளி: செல்பி எடுக்க சுற்றுலா பயணிகள் போட்டாபோட்டி!

ABOUT THE AUTHOR

...view details