தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் தெரு நாய்கள் தொல்லை.. நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Pudukottai Municipality: புதுக்கோட்டை நகரில் சுற்றிதிரியும் நாய்களை கட்டுபடுத்த வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

pudukottai-municipal-councilors-protest-demanding-control-of-dogs
நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 3:37 PM IST

நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்!

புதுக்கோட்டை:புதுக்கோட்டை நகர்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் திலகவதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டதிற்கு துணைத் தலைவர் லியாகத்தலி, ஆணையர் சியாமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய 37 வகையான திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கபட்டது.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பிகள் பேசியது: சேட் (அதிமுக) :கடந்த ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில் வரி குறைப்பு குறித்து தீர்மானம் இயற்றப்பட்டது. அந்த தீர்மானம் என்னவாயிற்று? என்ற கேள்வி எழுப்பியதோடு, பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி வசூலிக்கப்படாமல் உள்ளது. .புதுக்கோட்டை நகரில் தெருநாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதை கட்டுபடுத்த நடவடிக்கை எடுப்பட வேண்டும் என்றார்.

ராஜா முகமது (காங்கிரஸ்): எனது வார்டுக்கு உட்பட்ட நகரில் தெருவிளக்கு எரிவதில்லை,வார்டில் உள்ள பெரும்பாலான சாலைகள் சிதிலமடைந்துள்ள. இதனை சரி செய்து தரவேண்டும் மேலும் நகரில் உள்ள நாய்களை கட்டுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மூர்த்தி (திமுக):நகராட்சி பகுதியில் உள்ள குளங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக தேங்கியுள்ளன. இதனால் மழைநீர் வரும் மற்றும் உபநீர் வெளியேறும் பாதைகள் அடைபட்டுள்ளன. மேலும் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாண்டி (அதிமுக): அசோக் நகர் பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி மூலம் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

செந்தில் (அதிமுக):இதனையடுத்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர் செந்தில் பேசும் போது, ”நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் பிரச்சினை உள்ளது. இதனால் சாலை விபத்துக்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. சாலையில் செல்பவர்களை தெரு நாய்களை பார்த்து அச்சமடைந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டு காலமாக இது குறித்து நகராட்சி கூட்டத்தில் பேசி வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த கூட்டத்தில் தெருநாய்களை பிடிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்பதை நகராட்சி நிர்வாகம் தெரியப்படுத்தவில்லை என்றால் நகர்மன்ற கூட்ட அரங்கை விட்டு வெளியேற மாட்டேன்” என்று கூறி உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் நகராட்சி கூட்டரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவருடன் சேர்ந்து அதிமுக மற்றும் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன்பேசிய நகராட்சி தலைவர் திலகவதி, தெரு நாய் பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து அதிமுக நகர் உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:மாத துவக்கத்திலேயே அதிர்ச்சி..! வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details