தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு! - டிஎன்ஏ

புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 10 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

Pudukottai
Pudukottai

By

Published : May 8, 2023, 7:15 PM IST

வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்தப் புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில், திடீரென வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி போலீசார் கடந்த 105 நாட்களுக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறையூர், வேங்கை வயல், காவிரி நகர், கீழ முத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 153 நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்ட நீரினை ஆய்வுக்கு உட்படுத்தியதில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் கலக்கப்பட்ட மலம் மனிதக்கழிவு என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதன் அடிப்படையில் 11 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், அதற்கு பார்த்திபன் என்ற அதிகாரி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிடப்பட்டது. 11 பேரிடம் டிஎன்ஏ சோதனையை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் தலைமையில் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவையடுத்து கடந்த 25ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் கூறிய வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த 9 நபர்களிடமும், காவிரி நகர் மற்றும் கீழ முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த தலா ஒருவரிடமும் டிஎன்ஏ சோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இதில் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்த காசி, ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜா, கீழ முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் முத்தையா ஆகியோருக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

மீதமுள்ள 8 பேர் ரத்த மாதிரி கொடுக்க மறுப்புத் தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளனர். இதையடுத்து மீண்டும் நீதிமன்றத்தை நாடிய சிபிசிஐடி போலீசார், புதிதாக மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரினர். வழக்குத் தொடர்பாக 10 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கீழ முத்துக்காடு, மேல முத்துக்காடு, வேங்கைவயல் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேர்க்கப்பட்டது.

இதையும் படிங்க :"ஆன்மிகத்தோடு கூடிய தமிழே.. தமிழகத்திற்கு வளர்ச்சியைத் தரும்" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

இதையும் படிங்க:பொறியியல் கட்ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு.. வல்லுநர்களின் கருத்து என்ன?

ABOUT THE AUTHOR

...view details