புதுக்கோட்டை: திருமயம் அடுத்த துர்வாசபுரத்தில் பாகம்பிரியாள் உடனுறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் காலபைரவர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி புதிதாக ஆயிரத்து 108 சிவ லிங்கங்களும், 69 லட்ச ரூபாய் மதிப்பில் திருத்தேரும் அமைக்கப்பட்டது.
பாகம்பிரியாள் ஆலய புதிய தேர் வெள்ளோட்டம் - பக்தர்கள் சாமி தரிசனம் - பக்தர்கள் சாமி தரிசனம்
திருமயம் அருகில் பாகம்பிரியாள் கோயில் தேர் வெள்ளோட்ட விழாவில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்ட விழா
புதிதாக அமைக்கப்பட்ட தேரின் வெள்ளோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மயிலாட்டம், தப்பாட்டம் உள்பட இசைக்கருவிகள் முழங்க மக்கள் வெள்ளத்தில் தேர் ஊர்ந்து சென்றது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
பாகம்பிரியாள் ஆலய புதிய தேர் வெள்ளோட்டம் - பக்தர்கள் சாமி தரிசனம்
இதையும் படிங்க:மழை: இன்று சென்னையில் ஆய்வுசெய்த CM; நாளை டெல்டா பகுதிகளுக்கு விஜயம்