புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இருந்து, தினமும் 54 பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டுவருகின்றன. கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும்விதமாக, தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் பேருந்துகள் அனைத்தும் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பேருந்து ஒன்றின் பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக, திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தால் மளமளவென பேருந்து முழுவதும் பற்றி எரியத்தொடங்கியது. தொடர்ந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து பேருந்துகளுக்கும் தீ பரவியது.
பேருந்து எரிவதைக் கண்ட பணியிலிருந்த பணிமனை அலுவலர்கள், காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். அதற்குள் ஒரு பேருந்து முற்றிலும் தீயில் எரிந்து நாசமாகின.
தீப்பற்றி எரிந்த பேருந்துகள். இந்த விபத்தில் மேலும் 5 பேருந்துகள் சேதம் அடைந்தன. விபத்தில் தமிழக அரசால் தற்போது வழங்கப்பட்ட 4 புதிய பேருந்துகளும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :கடமை தவறிய அரசு அலுவலர்கள் இருவர் இடைநீக்கம்!