தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியர் வரும்வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்- புதுக்கோட்டையில் பரபரப்பு - government staffs protest

புதுக்கோட்டை: துணை வட்டாட்சியர் அலுவலர்களை நியமிக்கக்கோரி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர்  காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆட்சியர் வரும்வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

pudukottai government staffs protest

By

Published : Sep 23, 2019, 3:17 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை வட்டாட்சியர் அலுவலர்களை நியமிக்கக்கோரி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் முந்நூறுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் திருமலை பேசுகையில், "துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உயர் நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வெகு நாட்களாகின்றன. ஆயினும் துணை வட்டாட்சியர்களுக்கான பணியிடங்களை நிரப்பாமல் மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

ஆட்சியர் வரும்வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்

துணை வட்டாட்சியரை நிரப்பாவிட்டாலும், தற்காலிகமான பதவி உயர்வையாவது அளிக்க வேண்டுகிறோம். இதற்கு மாவட்ட நிர்வாகம் தடைசெய்தது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அலுவலர்களை நியமிக்க வேண்டும். ஆட்சியர் வரும்வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details