தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டை மாவட்ட கிளைச் சிறையில் சிறைத் துறை டிஐஜி திடீர் ஆய்வு! - Pudukottai district DGP

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வட்ட கிளைச் சிறையில் சிறைத் துறை டிஐஜி திடீரென ஆய்வுசெய்தார். பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஆய்வுசெய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Pudukottai jail
Pudukottai jail

By

Published : Apr 24, 2021, 5:39 PM IST

புதுக்கோட்டை மாவட்ட கிளைச் சிறையில் தண்டனைப் பெற்ற கைதிகள், விசாரணைக் கைதிகள் என 500 பேர் உள்ளனர்

மேலும் இதே வளாகத்தில் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளி பார்ஸ்டல் பள்ளி இயங்கிவருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட சிறார் கைதிகள் உள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் சர்வசாதாரணமாக கிடைப்பதாகவும் ஏற்கனவே கைதிகள் சிலர் கஞ்சா வைத்திருந்ததாகவும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு இருந்தது.

தற்போது கரோனா காரணமாக அரசு வழிகாட்டு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்துவந்தது.

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டச் சிறைக்கு சிறைத் துறை டிஐஜி கனகராஜ் திடீர் ஆய்வுமேற்கொண்டார். அவர் சிறைக்குள் சென்று ஒவ்வொரு அறையாக ஆய்வுசெய்ததோடு கைதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

ABOUT THE AUTHOR

...view details