தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் புதுக்கோட்டை: திருமயம் அருகே தேக்காட்டூர் கிராமத்தில் பெரியகண்மாய், சிறுவாணிகண்மாய், நமுணை கண்மாய் உள்ளிட்ட 7 கண்மாய்கள் உள்ளனர். தேக்கட்டூரில் உள்ள பெரிய கண்மாய் பாசனத்தை மட்டுமே நம்பி 500ஏக்கருக்கும் மேலாக விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக அறுவடைக்கு தனியாக இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்ததோடு நீரில் மூழ்கியது. இதனால் 500 ஏக்கரில் பயிரப்பட்டு இருந்த 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டும் இதே போல் பாதிக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக அரசு அலுவலர்களுக்கு தகவல் அளித்தும் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. அதேபோல் இந்த வருடமும் கடுமையாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தகுந்த நிவாரணம் வழங்குவதோடு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மேலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் அறுவடை செய்யப்பட்ட நெல் சேதம் அடைகிறது எனவே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!