தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் லாரி விபத்து: ஆயிரக்கணக்கான முட்டைகள் நாசம் - புதுக்கோட்டை லாரி விபத்து

புதுக்கோட்டை: சத்தியமங்கலம் அருகே முட்டை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஆயிரக்கணக்கான முட்டைகள் உடைந்து நாசமடைந்துள்ளன.

புதுக்கோட்டையில் லாரி விபத்தில் ஆயிரக்கணக்கான முட்டைகள் நாசம்

By

Published : May 16, 2019, 11:24 AM IST

நாமக்கல்லில் இருந்து புதுக்கோட்டைக்கு லாரி ஒன்று முட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, லாரியின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியில் இருந்த பல்லாயிரக்கணக்கான முட்டைகள் சாலையில் உருண்டு ஓடி உடைந்து நாசமாகின. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெள்ளனூர் காவல்துறையினர், காலில் லேசான காயத்தோடு இருந்த ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details