புதுக்கோட்டை மாவட்ட நகராட்சி, மச்சுவாடி பகுதிகளில் வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர்களிடன் மன உளைச்சலின்றி இருக்குமாறு பழக்கூடைகள் கொடுத்து ஆறுதல் தெரித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு வழிகாட்டுதலுடன், மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.