நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இந்த வைரசைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில் தஞ்சாவூர் - புதுக்கோட்டை மாவட்ட எல்லைப்பகுதியான ஆவணம் கைகாட்டியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு, அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகிறதா எனப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வுமேற்கொண்டார்.