தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலை வழக்கில் கைதான மூவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம் - Pudukottai Crime News

புதுக்கோட்டை: முன்விரோதம் காரணமாக ஒருவரைக் கொலைசெய்த வழக்கில் கைதான மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Pudukottai 3 persons arrested in gundas act
Pudukottai 3 persons arrested in gundas act

By

Published : Jul 26, 2020, 2:39 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் இடையர் தெருவைச் சேர்ந்தவர் ரெங்கசாமி (43). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருதமுத்து என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது.

இந்நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ரெங்கசாமியை, மருதமுத்து, அவரது மனைவி வெள்ளையம்மாள், மகன் மணிகண்டன் ஆகிய மூவரும் சேர்ந்து கட்டையால் தலையில் பலமாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த ரெங்கசாமி சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் இதுகுறித்து அன்னவாசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரெங்கசாமியைத் தாக்கிய மூவரையும் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின்பேரில் மூன்று பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details