அறந்தாங்கி அருகே ரெத்தினகோட்டைச் சேர்ந்தவர் முகமது மன்சூர். இவர், தன் தாயுடன் வீட்டுக்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக்கொண்டு வீட்டுக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தார்.
நடுவழியில் தீப்பற்றி எரிந்த பைக்! - நடுவழியில் தீப்பற்றி எரிந்த பைக்
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்தால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு நிலவியது.
அப்போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக் கண்ட பாதசாரிகள் சத்தம் போட்டதால் உடனடியாக வண்டியை நிறுத்தி விட்டு முகமதுவும், அவரது தாயாரும் தப்பியோடினர்.
இதையடுத்து, தீப்பற்றி எரிந்த பைக்கை அக்கம்பக்கத்தினர் மணலைப்போட்டும் தண்ணீரை ஊற்றியும் அணைத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீ மற்ற இடங்களுக்குப் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதியில் இரண்டு பெட்ரோல் பங்க் இருப்பாதல் இச்சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.