புதுக்கோட்டை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கேரளாவிலிருந்து ஓவியர்கள் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தின் சுவர்கள், சாலையோர சுவர்களில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டு மேம்படுத்தப்பட்டன.
ஓவியங்கள் வரையப்பட்டது முதல் சில நாட்கள் முன்புவரை சீராகப் பராமரிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது சினிமா விளம்பரங்கள், போஸ்டர்கள் ஓவியங்கள் வரையப்பட்ட சுவர்கள் மீது ஒட்டப்பட்டும், வரையப்பட்டும் பாழாகிவருகின்றன. புதுக்கோட்டைக்கு அழகு சேர்க்கும் விதமாக இருந்த இந்த ஓவியங்களின்மீது, ரசிகர்கள் என்ற பெயரில் திரையரங்குகளில் வெளிவர இருக்கும் படங்களின் விளம்பரத்தை எழுதியும், பலவிதமான போஸ்டர்களை ஒட்டியும் சிதைத்து வருகின்றனர்.