புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைடுத்த காராவயல் ஊராட்சி ஒன்றியத்தில் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 2017-18ம் கல்வி ஆண்டில் அன்புமணி என்ற ஆசிரியை இப்பள்ளியில் பணிக்கு சேர்ந்துள்ளார். பணிக்கு சேர்ந்தது முதல் மாணவர்களுக்கு நல்ல கல்வி போதனையை வழங்கி வந்துள்ளார். இதனால் பெற்றோர்களிடம் நன்மதிப்பை பெற்றார் ஆசிரியை அன்புமணி, திடீரென வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுதியுள்ளது.
ஆசிரியை பணியிட மாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!
புதுக்கோட்டை: அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியை ஒருவரின் பணியிட மாறுதலை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புமணி ஆசிரியை வருகைக்கு பிறகு ஊராட்சித் தொடக்கப் பள்ளி குழந்தைகள் நல்ல முறையில் படிப்பதைக் கண்டு, தனியார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்ததாகவும் தற்போது ஆசிரியை மாற்றத்தால் மிகுந்த கவலையடைந்துள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே அன்புமணி ஆசிரியை மீண்டும் அதே பள்ளிக்கு வர வேண்டும் எனக்கூறி பெற்றோர்கள், பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துறை அலுவலர்கள், இது குறித்து உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இதனால், அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.