தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது லட்சியம்! - பளு தூக்கும்  போட்டி

புதுக்கோட்டை : அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் கூலி தொழிலாளி மகள் தேசிய அளவிலான  பளு தூக்கும்  போட்டியில்  பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மாணவி சினேகா

By

Published : Mar 20, 2019, 10:59 PM IST

வேலூரில் பிப்ரவரி 17 முதல் 19 வரை மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சினேகா கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். இவருக்கு தமிழக அரசின் சார்பில் தங்கப்பதக்கம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கி பாராட்டியது.

மேலும் இவர் நாக்பூர், புனே உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டிகளிலும் வென்றுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து 8 முறை தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

இதுகுறித்து சினேகாவிடம் பேசியபோது, தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறேன். மருத்துவம் படிக்க வேண்டும் என ஆசை உள்ளது. பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே லட்சியம் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து சினேகாவின் தந்தையிடம் பேசியபோது, நான் வறுமையில் இருந்தாலும் எனது பிள்ளைகள் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது ஆசை. என் மகள் நிச்சயம் ஒலிம்பிக்கில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது என தெரிவித்தார்.

சினேகாவின் பயிற்சியாளர் முத்துராமலிங்கம் பேசியபோது, நான் எவ்வித பயிற்சி கட்டணங்களும் மாணவிகளிடம் வாங்குவதில்லை பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள் அதை உணர்ந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். சினேகா ஒலிம்பிக்கில் நிச்சயம் வெற்றி பெறுவாள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை இதற்காக புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரிகளையும் சினேகாவின் பெற்றோர்களையும் நான் வாழ்த்தி மகிழ்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details